உலகிலேயே மிகக் குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே வாக்குப் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஆரம்பித்து, 4 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து இன்று காலை 7 மணி முதலே மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதே போல் மக்களும் காலை 7 மணி முதல் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகின் மிகவும் குள்ளமான பெண்ணான 26 வயதுடைய ஜோதி அம்கே மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை மகிழ்ச்சியுடன் வாக்களித்தார்.
உலகின் மிகவும் குள்ளமான இவர் கின்னஸ், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரது உயரம் 62.8 செ.மீ ஆகும்.
ஜோதி அம்கே வாக்களித்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாரஷ்டிரா மாநிலத்தில் 3 மணி நிலவரப்படி 38.35% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment