செல்பி மோகத்தால் அமெரிக்க பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Briar Cliff பல்கலைக்கழக மாணவியான 20 வயதுடைய Andrea Norton என்பவரே சாவடைந்தவராவாரர்.
மலையேற்றத்தின்போது மலை முகடு ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற குறித்த மாணவி, 100 அடி ஆழத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற Arkansas பகுதியில் அமைந்துள்ள மலை முகடு ஒன்றின் விளிம்பில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போதே தவறி வீழ்ந்து இறந்துள்ளார்.
சுற்றுச்சூழல் அறிவியல் மாணவியான Norton, தனது வகுப்பு தோழிகளுடன் மலையேற்றத்திற்கு சென்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
0 comments:
Post a Comment