தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்றைய தினம் இரு தடவைகள் முன்னெச்சரிக்கைத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
முதலாவது எச்சரிக்கையை நேற்று மாலை வெளியிட்டிருந்த அமெரிக்க தூதரகம், மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை உள்ளதாகவும், இதனால் , இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை தமது குடிமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து, அமெரிக்க தூதரகம் நேற்றிரவு மீண்டும் இரண்டாவது எச்சரிக்கையை விடுத்தது.
அதாவது, சுற்றுலாத் தலங்கள், அங்காடிகள், விருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் தொடர்பில், அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment