காடழிப்பில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டதுடன், காடழிக்க பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி இயந்திம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா, புளியங்குளம், பழையவாடிப் பகுதியில் உள்ள பெருங் காட்டைப் சிலர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அழித்து வருவதாக புளியங்குளம் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி வி.எஸ்.டீ.விதானகே, எஸ்.ஐ.ரணசிங்க, பொலிஸ் கான்ஸ்ரபிள்களான ஜெயசூரிய மற்றும் யூட் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு சுமார் அரை ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் காடு அழிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காடழிப்பில் ஈடுபட்ட 50, 40 மற்றும் 34 வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் காட்டை அழிப்பதற்கு பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.
உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆதரவுடனேயே இந்தக் காடழிப்பு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment