சித்திரவதைகளை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் உப குழு தமது இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது.
இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்தக் குழுவாவது தமிழர்ககள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத் தருமா?
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை கடந்த 2 ஆம் திகதி மேற்கொண்டனர். இந்தப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதன்பின் அக் குழு தமது பயணம் குறித்து, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் குழுவின் தலைவர் விக்டர் சகாரியா தெரிவித்ததாவது,
இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள முழுமையான ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்தது.
தடுப்பு முகாம்களுக்கு செல்ல முடிந்ததுடன், தனிப்பட்ட நேர்காணல்களையும் மேற்கொள்ள முடிந்தது.
இலங்கையில் எமது பணிகள், இரகசியமாகவும் பக்கசார்பற்றதாகவும் தெரிவின்மை அடிப்படையிலும் பொதுமை என்ற தோற்றத்துடனும் இடம்பெற்றது.
இலங்கையில் சித்திரவதைகளுக்கு எதிரான பொறிமுறை ஒன்று செயற்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்
எமது குழுவினர் இலங்கையில், பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள், மனநல அமைப்பு, சிறார் புனர்வாழ்வு நிலையம், ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அரச பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளோம்.
அடுத்தாகஇ எமது உப குழு இந்தப் பயணத்தின் கண்டறிவுகள் தொடர்பாக இலங்கை அரசுக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அளிக்கும். அதில் எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் குறிப்பிடுவோம்.
இந்த அறிக்கையை அரச தரப்புகள் பகிரங்கப்படுத்துவதையும்ஐ.நா உபகுழு ஊக்குவிக்கும்.' என்றார்.
எத்தனையோ பேர் வந்தார்கள் என்னென்னமோ கேட்டார்கள் எல்லாம் செய்கிறோம், உரிய தீர்வுக்கு வழி வகுக்கிறோம் என்றெல்லாம் ஏராளமாகப் பேசினார்கள். இருந்தும் என்ன பயன்?
இன்று வரை கையேந்து நிலையில் தான் வீதிகளில் காத்திருக்கிறோம். தற்போது ஐ.நா உப குழு வந்து விட்டுச் செல்கிறார்கள்.
இவர்களின் பயணத்துக்கான நோக்கம் நிறைவேறுமா? தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் செயல்களுக்கு நீதி கிட்டுமா என்ற கேள்வியுடன் காத்திருக்கிறார்கள் தமிழர்கள்....
0 comments:
Post a Comment