முடிவில்லா புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கஸ்தூரி, பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்று கூறியிருக்கிறார்.
முடிவில்லா புன்னகை படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இதில் அவர் பேசும்போது, ‘ஒளவையார், மதர் தெரசா, ஜெயலலிதா ஆகியோர் பெண்களில் மிகப்பெரிய ஆளுமைகள். சினிமா சாக்கடை ஆச்சே என பலர் விமர்சனம் செய்த போது, என் தந்தைதான் எனக்கு ஆதரவு கொடுத்தார். பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. சில வீடுகளில் அதை கணவர் கொடுத்தாலும், முதலில் ஆரம்பிப்பவர்கள் தந்தைகளே..
மனைவி கண்ணகியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். மகள் கல்பனா சாவ்லா ஆக வேண்டும் என நினைப்பார்கள் என்று தந்தையரை பற்றி கஸ்தூரி பேசினார்.
0 comments:
Post a Comment