கமலுக்கு ரஜினி உதவுவாரா

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை உணர்ந்த  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியல் களத்தில் குதித்தனர். 

கமலுக்கு முன்னரே அரசியல் பயணத்தை வெளியிட்டார் ரஜினி. தொடர்ந்து மாவட்டம் வாரிய நிர்வாகிகளை நியமித்தார். மேலும், ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். ஆனால் அதன்பின்னர் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. 

சட்டசபை தேர்தலே இலக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என ரஜினி வெளிப்படையாக கூறிவிட்டு, அடுத்தப்படியாக முருகதாஸின் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். 

மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த  கமல்ஹாசன்,  லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கி உள்ளார். 

ரஜினியிடம் ஏற்கனவே கமல்ஹாசன் மறைமுகமாக ஆதரவும் கேட்டார். அதாவது, "தேர்தலில் எங்களுக்கு ரஜினி ஆதரவு அளிக்க விரும்பினால் அளிக்கலாம், அது அவரது விருப்பம். இதுதொடர்பாக அவர் மட்டுமே முடிவெடுக்க முடியும்" என ஒரு பேட்டியின்போது கமல் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் "லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி ரஜினியிடம் கேட்டதாகவும், அவரும் கண்டிப்பாக செய்கிறேன் என சொன்னதாகவும், ரஜினி ஆதரவு தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது  என்றும் கூறியுள்ளார்.

நீண்டகால நண்பர் என்பதால் கமல்ஹாசனுக்கு, ரஜினி ஆதரவு அளிப்பாரா.? அல்லது வழக்கம் போல் மௌனமாய்தான்  இருந்துவிடுவாரா?



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment