அமெரிக்காவில் சிறிய ரக விமானமொன்று வீழ்ந்து நொறுங்கியதில் விமானி உட்பட அறுவர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கெர்வில்லே நகரில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோதே, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த கோரவிபத்தில் விமானி ஜெப்ரே வெயிஸ் உட்பட விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.
0 comments:
Post a Comment