சட்டவிரோத விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி பியர் ரின்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் அதிகாலைப் பொழுதில் இடம்பெற்றுள்ளது.
பியர் கடத்தப்படுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டனர்.
இதன்போதே பியர் ரின்கள் எடுத்துச் செல்லப்பட்டமை தெரியவந்தது. அதனை எடுத்துச் சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 85 பியர் ரின்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment