பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து சமீபத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டத்தை வரவேற்றார்.
மேலும் வாஜ்பாய் காலத்தில் இருந்து நதிநீர் இணைப்பை வலியுறுத்தி வருவதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.
இந்நிலையில், நாகை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது 'பாஜகவின் தேர்தல அறிக்கையில் புதிதாக திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா மோடி சொல்வது ரஜினிக்கு மட்டுமே புரிகிறது. பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி வரவேற்றிருக்கிறார்.
ரஜினி நடிகர், மோடி இயக்குநர். இயக்குநர் சொல்வதை நடிகர் கேட்டுத்தான் ஆக வேண்டும். ரஜினிக்கு சொந்தமாக சிந்திக்க மூளை இல்லை என்று அவர் கூறினார்.
#TamilNewsKing #IndiaNews #Seeman
#TamilNewsKing #IndiaNews #Seeman
0 comments:
Post a Comment