வினோத் இயக்கத்தில் அஜித் நாயகனாக நடிக்கும் படம் 'நேர் கொண்ட பார்வை'. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிக்க 'பிங்க்' என்ற பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
இந்தப் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, வித்யாபாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா தரியங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் தான் நடைபெற்றது. 40 நாள்களில் இப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு குறைந்த நாட்களில் முடிவடைந்தது இதுதான் முதல் முறை. அடுத்து இறுதிக்கட்ட வேலைகள் நடந்து முடிந்து ஆகஸ்ட் 10 ஆம் திகதி படம் வெளியாகிறது.
0 comments:
Post a Comment