மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சுமார் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடுக் குளத்தில் விடப்பட்டுள்ளது.
தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் கிளிநொச்சி இராணுவத்தினரும் இணைந்து மீன் குஞ்சுகளை குளத்தில் விடப்பட்டனர்.
இதில் கிளிநொச்சி இராணுவ படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் ரவிப்பிரிய அவர்களும், தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் தலைவர் நுவான் பிரசாத் மதவன் ஆராச்சி அவர்களும் மீன்பிடி தொழிலாளர்களும் கலந்துகொண்டார்கள்.
0 comments:
Post a Comment