எதிர்வரும் மே மாதம் இடம்பெறவிருந்த 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியை பி.சி.சி.ஐ. சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்ட 3 கலரிகளை திறக்க டி.என்.சி.ஏ. அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.பி.எல். 2019 சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமானது. இந்த நிலையில் தற்போது இத் தொடரில் 40 லீக் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளது.
இதவேளை இத் தொடரின் இறுதிப் போட்டிய சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துவதற்கு பி.சி.சி.ஐ. முடிவு செய்திருந்தது. எனினும் சேப்பாக்கம் மைதானத்தின் கலரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ,ஜே,கே உள்ளிட்ட 3 கலரிகள் (12,000 இருக்கைகள்) அமரக்கூடிய வசதி கொண்டவை. இவற்றை திறப்பதற்கு தமிழக அரசிடம் இருந்து உரிய அனுமதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் பெற முடியவில்லை.
0 comments:
Post a Comment