இரணைமடுக் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் !




கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு தேசிய நீர் வால் உயிரின வளர்ப்புஅதிகாரசபையால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு குளத்தில் விடப்பட்டுள்ளதுசென்ற மூன்று வருடங்கல் இரணைமடு குளத்தின் அபிவிருத்தி காரணமாக குளத்தின் நீர் முற்றாக அகற்றப்பட்டத்தினால் குளத்தை நம்பி வாழும் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்ற ஆண்டு குளத்தின் அபிவிருத்திகள் நிறைவடைந்த பின்னர் பருவபேர்ச்சி மழையும் போதியளவு பெய்தமையினால் குளத்தின் நீர் போதியளவு கிடைத்தமையினால் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினரும் கிளிநொச்சி இராணுவத்தினரும் இணைந்து சுமார் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு குளத்தில் விடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் ரவிப்பிரிய அவர்களும், தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் தலைவர் நுவான் பிரசாத் மதவன் ஆராச்சி அவர்களும் மீன்பிடி தொழிலாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment