வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்துப் பேசியுள்ளார் ஐ.நா பிரதிநிதி டேவிற்வெலி.
இலங்கை வந்த நேற்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கிளி.முல்லை மாவட்டங்களின் இணைப்பாளர்களான கதிர்காமநாதன் கோகிலா மரியசுரேஷ் ஈஷவரி ஆகியோரை கிளிநொச்சியில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
இலங்கை அரசால் நிறுவப்படும் காணாமல் போனோர் அலுவலகத்துடன் {ஓ.என்.பி} இணைந்து செயல்பட்டால்தான் ஐ.நா சில முடிவுகளைத்தர அறிவுறுத்துமே தவிர நீங்கள் தனித்து நின்று போராடினால் எதுவித தீர்வும் கிடைக்காது என்றார்.
”இதனை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம். எம்மால் முடிந்தளவு எமது போராட்டத்தை எமது பிள்ளைகளின் தீரவுகிடைக்கும்வரை முன்னெடுப்போம்” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment