உடல் பாகங்கள் விற்பனை மூவர் கைது

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராசாகொண்டா பொலிஸாரால் பெண் ஒருவர் உட்பட மூவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மூவரும், இலங்கை, எகிப்து, துருக்கி உட்பட மேலும் சில நாடுகளுக்கு மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

20 இலட்சம் இந்திய ரூபா அளவில் சிறுநீரகங்களை விற்பனை செய்ய அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மூவரில்  ஒருவர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நோயாளர்களையும், உடல் பாகங்களை விற்பனை செய்பவர்களையும் அனுப்பி, சுமார் 40 மனித உடல் பாகங்களை மாற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்  என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment