ஐந்து பேர் அடங்கிய சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் வவுனியா சிறைச்சாலைக்கு விஜயமொன்றை இன்று மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 1 மணித்தியாலங்கள் வவுனியா சிறைச்சாலைக்குச் சென்ற ஐ.நா. அதிகாரிகள், சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விஜயம் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதும் எவ்வித கருத்துக்களையும் கூற அவர்கள் மறுத்துவிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் தமது விஜயம் தொடர்பாக செய்திகளை வெளியிட வேண்டாம் என ஐ.நா. அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment