டிக்டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்க
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டிக்டாக் மொபைல் செயலிக்கு தடை விதிக்குமாறு கடந்த 3ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் முன்னதாக, தங்கள் தளத்தில் இருந்த விதிமுறைகளை மீறிய 60 இலட்சம் பதிவுகளை நீக்கிவிட்டதாகவும் 13 வயதுக்கு மேற்பட்டவர்களே இச் செயலியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிக்டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதில், அரசின் விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் டிக்டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து டிக்டாக் செயலியை தத்தமது பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகி டிக்டாக ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் மத்தியஅரசு வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. என்றார்.
0 comments:
Post a Comment