இலங்கை வான் பரப்புக்குள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கெமராக்களை பறக்கவிடுவதற்கு நேற்று இரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது .
உயிர்ப்பு ஞாயிறு திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களையடுத்து சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முப்படையினர், பொலிஸார், விசேட பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து தேடுதல், சுற்றிவளைப்பு, சோதனை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
வாகனங்களை நிறுத்தி வைத்தல், பொதிகளை எவ்வாறு கையாளுதல் போன்றன குறித்து விசேட நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே – ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கமராக்களை பறக்கவிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளாவிய ரீதியில் முக்கிய இடங்களிலும், ஏனைய பகுதிகளிலும் விசாரணை வேட்டை தொடர்கிறது.
0 comments:
Post a Comment