தேர்தல் அதிகாரிகள் இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
இவர் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குப் பதிவு செய்ததன் பின்னர் செய்தியாளகளை சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
தற்போது தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுதாகி உள்ளது. சில இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் அதிகாரிகள் இதுவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார்.
0 comments:
Post a Comment