பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள பழைமைவாய்ந்த நோட்ரே டோம் என அழைக்கப்படும் தேவாலயத்தில் தீ பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தீ பரவியுள்ள நோட்ரே டோம் தேவாலயமானது சுமார் 850 வருடங்கள் பழைமை வாய்ந்தது. அத்துடன் குறித்த தேவாலயத்தை பார்வையிடுவதற்காக உலகெங்கிலுமிருந்து சுமார் பல்லாயிரக்கணக்கானோர் குறித்த பகுதிக்கு செல்வர்.
நோட்ரே டோம் தேவாயலத்தில் பிரான்ஸ் நேரப்படி மாலை 6 மணியளவில் பாரிய தீ பரவியுள்ளதாகவும் குறித்த தீயை கட்டுப்படுத்த பிரான்ஸின் தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த தேவாலயத்தின் கோபுரப்பகுதியில் தற்போது பல மில்லியன் ரூபா செலவில் திருத்தவேலைப்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தீ பரவலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
தற்போது குறித்த தீ தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த நோட்ரே டோம் தேவாலயம் முற்றாக எரிந்து நாசமாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக குறித்த தேவாலயத்தில் தீ பரவலின் போது ட்ரோன் கமெரா புகைப்படத்தில் இதனை அவதானிக்க முடிகின்றது.
0 comments:
Post a Comment