இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா தனது விசேட படையான என்.எஸ்.ஜி. எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளையடுத்து, பல்வேறு நாடுகளும் விசாரணைகளுக்கு உதவி வருகின்றன.
இந்த நிலையில், இலங்கைக்கு உதவி தேவைப்பட்டால், விசேட படையான தேசிய காவல்படையை அனுப்புவதற்கு தயார் நிலையில் இந்தியா இருப்பதாக இந்திய அரச அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தேசிய காவல்படை கொமாண்டோக்களை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment