வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான வயோதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கரவெட்டி காட்டுப்புலம் பகுதி வீடு ஒன்றில் கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 30 லீற்றர் கசிப்பை மீட்டதுடன் வீட்டின் உரிமையாளரான 64 வயதுடைய சந்தேக நபரையும் கைதுசெய்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட வயோதிபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment