தந்தை செல்வா நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது தந்தை செல்வா சிலைக்கு மலர் மாலை அணிவித்தும் நினைவு சம்பாதிக்கும் மலர் தூவியும் மெழுகுவர்த்திகள் கொழுத்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தந்தை செல்வா அறங்காவலர் சபை ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் உட்பட கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment