தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சிறப்புப் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த பேருந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
புதுவருடத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆயிரத்து 487 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment