தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் முதியவர்கள் இருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் முருகேசன் என்ற முதியவர், வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் மயங்கி வீழ்ந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணனும் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் வாக்குச் சாவடிகளில் சிறிது நேரம் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
0 comments:
Post a Comment