அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில், கருக்கள்குளம் வாவியில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
05 வயதுடைய, ரலபனாவ கல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ரணசிங்க ஆரச்சிலாகே தினேஷ் பிரியந்த என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன், தனது மூத்த சகோதரி மற்றும் மேலும் சிலருடன் இணைந்து நீராடச் சென்ற வேளையிலேயே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment