கிளிநொச்சியில் முப்படையினர் குவிக்கப்பட்டு நேற்றையதினம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படடது.
இதன்போது முஸ்லிம்கள் அறுவர் படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கனகபுரத்தில் வியாபார நிலையங்கள் நடத்தும் நால்வர், லும்பினி விகாரைக்கு அருகில் ஒருவர், கனகாம்பிகைக்குளம் பகுதியில் வசித்து வந்த ஒருவர் என 6 பேர் கைதாகினர்.
கடந்த ஞாயிறன்று வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அமைப்புக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது எனக் குறிப்பிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கையை அடுத்து கிளிநொச்சியில் பதற்றம் நிலவுகின்றது. அங்கு முப்படையினரின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment