பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி பெற்றுள்ளமை அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த தண்டரை புதுச்சேரி கிராமத்தில் நடந்துள்ளது.
மொரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் சந்தியா (வயது-15). என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி, பொதுத்தேர்வை சரியாக எழுதவில்லை என அடிக்கடி பெற்றோர் மற்றும் தோழிகளிடம் கூறி வந்த நிலையில், இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வு எழுதியிருந்த சந்தியா தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்தார். தேர்வு முடிவை பார்க்காத சந்தியா இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்த பெற்றோர், கதறி அழுதனர். சம்பவ இடத்துக்குச் சென்ற .பொலிஸார், மாணவியின் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே, மாணவி சந்தியா தேர்வில் தேர்ச்சி பெற்றாரா..? என அவரது தோழிகள் இணையதளத்தில் பார்த்த போது சந்தியா, 191 மதிப்பெண் பெற்று, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அதனை பார்க்காமலேயே தோல்வி பயத்தில் சந்தியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவரது தோழிகள் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment