இந்து முன்னணி விளையாட்டுக்கழக அணியை வெற்றி கொண்டு இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது ஸ்ரார் ஈகிள் விளையாட்டுக்கழகம்.
மன்னார் மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யபட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான பிரிவு 3 க்கான துடுப்பாட்டத் தொடர் நேற்று இடம்பெற்றது.
நானாட்டான் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற அரையிறுதியாட்டத்தில் ஸ்ரார்ஈகிள் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து இந்து முன்னனி விளையாட்டுக்கழக அணி மோதியது,
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரார் ஈகிள் விளையாட்டுக்கழக அணியினர் 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 375 ஓட்டங்களைப் பெற்றது.
376 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்து முன்னனி விளையாட்டுக்கழக அணியினர் 19 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்கினையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டும் பெற்றது.
0 comments:
Post a Comment