நாளையதினம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 138.57 கோடி பணம் இதுவரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
நேற்று மட்டும் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் - 3.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் கோவை - 1.41 கோடி
கடலூர் - 52.39 இலட்சம் ராமநாதபுரம் - 19.94 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ள பணம் - 56.55 கோடி (PSK பொறியியல் கட்டுமான நிறுவன பறிமுதல் அடக்கம் 14.17 கோடி)
இதுவரை பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கம் - ஆயிரத்து 22 கிலோ , வெள்ளி 645 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. விலைமதிப்பற்ற உலோகங்களின் மொத்த மதிப்பு - 294.38 கோடி.
43.54 இலட்சம் பெறுமதியான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இதே வேளை போதைப் பொருள்கள் பறிமுதல் மதிப்பு - 37.68 லட்சம். என்றார்.
0 comments:
Post a Comment