செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் மே 31 இல் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து புரமோஷனும் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 29 ஆம் திகதி வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி 2' திரைப்படமும் 'என்.ஜி.கே' வெளியாகும் அதே மே 31ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும் என்பதால் மே மாதமே வெளியிட வேண்டிய கட்டாயம் காரணமாக இரு பெரிய படங்களும் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment