மும்பை, சென்னை அணிகளுக்கு இடையிலானப் போட்டியை வென்றதன் மூலம் மும்பை அணி 8 ஆண்டுகால சாதனையைத் தக்க வைத்துள்ளது.
12 ஆவது ஐபிஎல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் மும்பை அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பவுலிங்கில் சிறப்பாக செயலாற்றிய சென்னை அணி துடுப்பாட்டத்தில் சொதப்பியதால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சென்னையில் நடந்த ஒரு போட்டியில் கூட சென்னை அணி மும்பை அணியை வென்றதில்லை என்ற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் வென்று அந்த களங்கத்தைப் போக்கும் என நினைக்கையில் மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த சீசனில் சென்னை அணி தனது மைதானத்தில் சந்திக்கும் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment