திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
96 வயதான திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் அண்ணாநகரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அவர் மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் பேராசிரியர் க. அன்பழகன்.
0 comments:
Post a Comment