ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் தங்க மகள் கோமதி.
23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் இடம்பெற்றது.
இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த கோமதிக்கு, சிறுவயதிலிருந்து தடகளப்போட்டியில் இருந்த ஆர்வத்தால், கடும் போராட்டத்திற்கு மத்தியில் சாதித்துள்ளார்.
இன்று நாடு திரும்பிய கோமதிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெற்றி குறித்து கோமதி கூறியதாவது, நான் தங்கம் வென்றுள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
பெங்களூர் வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் எனக்கு அலுவலகத்திலும் சற்று பிரச்சனை இருந்தது.
பயிற்சியின்போது காலிலும் அடிபட்டது, இருப்பினும் விடாமுற்சியால் போட்டியில் கலந்துகொண்டேன்.
அடுத்ததாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்தவிரும்புகிறேன் என்றார்.
0 comments:
Post a Comment