தங்கத்தை உடையில் மறைத்து கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடந்துள்ளது.
ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, தோகாவில் இருந்து வந்த பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.
அப்போது அந்த நபர், தங்கத்தை உருக்கி, பொலித்தீன் பையில் அடைத்து அதனை உடைக்குள் மறைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட தங்க பேஸ்ட் 1.16 கிலோ கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 36 இலட்சத்து, 99 ஆயிரத்து 782 ரூபா ஆகும்.
சந்தேகநபரை கைது செய்த, சுங்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment