வறிய குடும்பங்களுக்கான மலசல கூடங்களை அமைத்துக் கொடுத்தது இராணுவம்!







யாழ்ப்பாணம் - அரியாலை – பூம்புகார் பிரதேசத்தில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட மலசல கூடங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

பூம்புகார் -  சனசமூக நிலையத்தில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் 523 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் நிலந்த பெனாண்டோ கலந்து சிறப்பித்தார்.

இதன்போது வறிய  குடும்பங்களுக்கான 9 மலசல கூடங்களும், 75 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களும் இராணுவத்தால் வழங்கி வைக்கப்பட்டன. 
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment