அரைகுறை ஆடையுடன் நடனமாடிய பெண் ஒருவருக்கு ஒராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் நடனமாடிய 31 வயதான ரஷ்ய நாட்டுப் பெண்ணுக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர், உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடனம் ஆடி வருகிறார்.
இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், எகிப்து நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனடமாடியிருக்கிறார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலானதை அடுத்து, குறித்த பெண் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு பிணையில் வெளிவந்தார்.
இந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த பெண்ணான எக்டேரினா ஆண்ட்ரீவாவிற்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
0 comments:
Post a Comment