கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இந்த படத்தில் அவருடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது சில வெளிநாடுகளுக்கு சென்று பாடல் காட்சியை படமாக்கி வருகிறார் கே.வி.ஆனந்த்.
இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவில் காப்பான் படக்குழு முகாமிட்டள்ளது. அங்கு இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார். இப் படம் ஆகஸ்டு 30 ஆம் திகதி திரைக்கு வருகிறது.
ஜாவா தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் டைரக்டர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment