வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் முழுப் பாதுகாப்புடன் மத வழிபாடுகளை நடத்துமாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து, பொலிஸாரின் முழுப் பாதுகாப்புடன் வழிபாடுகளை நடத்துமாறு மதத் தலைவர்களிடம் அவர் கூறினார்.
தற்போது நாட்டில் இடம்பெறும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து, மக்களின் பாதுகாப்புக் கருதி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment