தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பெருமணவான பணம் சிக்கியுள்ளது.
காட்பாடி பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவரும் தி.மு.க. பகுதி செயலருமான சீனிவாசனது வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அவரின் வீட்டில் உள்ள அறைகள் மற்றும் பூட்டப்பட்ட கடை ஆகியவற்றில் சோதனை செய்தனர். அதே பகுதியில் உள்ள சீனிவாசனின் அக்கா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சீனிவாசன் வீட்டில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்ட பெரும்தொகைப் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. முக்கிய ஆவணங்களும் இதன்போது சிக்கியுள்ளன.
இதனையடுத்து, வருமான வரி அதிகாரிகள் சீனிவாசனிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள், ரூ.10 லட்சம் சிக்கியது.
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் துரைமுருகன் மகனுக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி, பள்ளி உள்ளது. இங்கு நடந்த 12 மணி நேர சோதனையில் கல்லூரி அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குடியாத்தம் முன்னாள் தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி ஆகியோர் வீடுகளில் நடத்தப்பட்டசோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment