வெள்ளவத்தைப் பகுதியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று சற்று முன்னர் நடந்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள திரையரங்குக்கு அண்மையில் அநாதரவற்ற நிலையில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றுள்ளது.
இதனையடுத்து பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து அதனை படையினர் பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது அதன் ஆசனத்தை திறப்பதற்காக வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment