ஆசிய தடகள செம்பியன்ஷிப் மகளிருக்கான ஓட்டப்போட்டியில், தமிழக வீராங்கனை ஒருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
23 ஆவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டிகள் கட்டாரின் டோகாவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டிகளில், இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் பங்கு பற்றியுள்ளன.
இதில் 2 ஆவது நாளான நேற்று இடம்பெற்ற மகளீருக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில், 30 வயதான தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.7 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
0 comments:
Post a Comment