நாட்டின் பல பகுதிகளில் இடம் பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்திலும் முப்படையினரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப் பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயங்கள் மற்றும் முஸ்ஸீம் பள்ளிவாசல்களுக்கு படையினர் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளர்.
இதேவேளை மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் முன் பகுதி நுழைவாயில்களில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு, மறு நுழைவாயிலூடாக மக்கள் சோதனைகளின் பின்னர் மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு, விசாரனைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment