இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக கடல் பகுதியில் ஏற்பட்ட அதிர்வினால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
புவியியல் அமைப்பின்படி ஆபத்தான நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன.
அவ்வகையில், இங்குள்ள சுலவேசி தீவில் (உள்ளூர் நேரப்படி) இன்றிரவு 7.40 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக கடல் பகுதியில் ஏற்பட்ட அதிர்வினால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
#Indonesianisland #Sulawesi
0 comments:
Post a Comment