கோத்தபாய ராஜபக்ச அல்லது மகிந்த ராஜபக்ச ஆகியோரில் யார் களமிறங்கினாலும் அதனைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. தாம் செய்த குற்றங்களுக்காக ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும்.
இவ்வாறு எச்சரித்துள்ளார் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு மகிந்த தரப்பு தயார் எனில் அவர்கள் அதனை அறிவிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஒரு பக்கமும், பொதுஜன பெரமுனவாக இன்னொரு அணியினர் மறு பக்கமும் உள்ளனர்.
இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஆகவே, இவர்களால் ஒரு தலைவரை – ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment