மிதக்கும் அணுமின் நிலையம்

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தில் வெற்றிகரமாக மின் உற்பத்தி செய்து பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த ரொஸாடொம் ஸ்டேட் அணுசக்தி கோர்பிரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கியுள்ளது. 

பெரும் பொருள் செலவில் மிகப்பெரிய சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில், மின்சார உற்பத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, ரொஸாடொம் குழுவினரின் மிகப்பெரிய சாதனை என அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

அணுமின் நிலைய அமைப்புகள் மற்றும் உபகரணங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, மின் திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் ரொஸாடொம் நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது முழு உற்பத்தித் திறனைப் பெற்றுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைதூரத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு இந்த அணு உலை முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment