பொலிஸ் முகாமை இலக்கு வைத்து தலிபானியர்கள் மேற்கொண்ட தாக்குதலில் எண்மர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின், பால்க் மாகாணம், சோல்கரா மாவட்டத்தின் சாய்கான் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஏ.எல்.பி. என்னும் ஆப்கானிஸ்தான் உள்ளூர் பொலிஸ் முகாம் மீதே நேற்று முன்தினம் இரவு தலீபானியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளையும் கொண்டு நடத்திய இந்தத் தாக்குதலால், அங்கிருந்த பொலிஸார் நிலைகுலைந்ததுடன், அவர்களும் பதில் தாக்குதல் மேற்கொண்டனர்.
தாக்குதல் சம்பவம் காரணமாக 8 பொலிஸார் உயிரிழந்ததுடன், மேலும் அறுவர் படுகாயமடைந்துள்னர்.
0 comments:
Post a Comment