புத்தளம் - நூர் பகுதியில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிக்கான அனுமதி பத்திரம் இல்லை என்பதோடு, அது இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து ரவைகள் சிலவும், 380 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர், புத்தளம் - மனகுண்டுவ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment