எமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் விவகாரத்திற்கு முழுமையாக தீர்வு காணப்படும். இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இலங்கையுடன் பேசி தீர்வு காண்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் கருத்தை கேட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தேன் ஒரு பொய் கூட இடம்பெறக்கூடாது எனக் கேட்டிருந்தேன்.
இந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என ராகுல்காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment